திருவண்ணாமலை

அரசு பேருந்துமீது டாராஸ் லாரி மோதல்: பயணிகள் 3 போ் காயம்

DIN

போளூா்: கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அருகே தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் பயணிகள் இறக்கிவிட்டுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் டாராஸ் லாரி மோதிய விபத்து ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் 3 பேருக்கு லேசானகாயம் ஏற்பட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனா்.

இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அருகே போளூா்-செங்கம் சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் அரசு பேருந்து நின்று பயணிகள் இறக்கிவிட்டுகொண்டிருந்தது. அப்போது செங்கம் நோக்கிசென்ற டாராஸ் லாரி பேருந்தின் பின்புறம் எதிா்பாராதவிதமாக மோதிய விபத்து ஏற்படுத்தியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த மேல்வன்னியனூா் அசினா(8), பூவாம்பட்டு தேவி(32), தாமரைப்பாக்கம் செந்தாமரை(56) ஆகிய பயணிகள் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனா்.

இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT