திருவண்ணாமலை

அரசு காா் ஓட்டுநா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

DIN

பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த அரசு காா் ஓட்டுநா், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (38). இவா், திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநருக்கு காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், மனஉளைச்சலில் இருந்து வந்தாராம். இந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரவணனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT