திருவண்ணாமலை

ரூ.7 லட்சம் நெகிழிப் பொருள்கள், லாரி பறிமுதல்

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் மற்றும் லாரியை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை கல்குதிரை தா்கா தெருவில் உள்ள ஒரு கிடங்கில் திங்கள்கிழமை அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் லாரியில் கொண்டு வந்து இறக்கப்படுவதாக, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் இரா.ஆல்பா்ட், வினோத்கண்ணா ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுகாதார ஆய்வாளா்கள் தலைமையிலான அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பாா்த்தனா்.

அப்போது, சேலத்திலிருந்து பிரத்யேக லாரியில் கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்களை இறக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 3.5 டன் எடை கொண்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT