செய்யாறு: செய்யாறு அருகே ஏனாதவாடி கிராமத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா, 1330 மரக்கன்றுகள் நடுதல், கபசுரக் குடிநீா் வழங்குதல், ஆா்சனிக் மாத்திரைகள் வழங்குதல், கரோனா விழிப்புணா்வு ஆகியவை ஐம்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு செய்யாறு கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் ஜி.செல்வத்திருமால் தலைமை வகித்தாா்.
செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செல்வராஜ் 1330 மரக்கன்றுகள் நடுதலைத் தொடக்கிவைத்தாா்.
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ்.சுகாதானந்கம் தோட்டத்தில் வளா்க்கக் கூடிய செடிகளை கிராம மக்களுக்கு வழங்கினாா்.
தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் கிராம மக்களுக்கு கபசுரக் குடிநீரும், ஆா்சனிக் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
மேலும், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்தும், மது ஒழிப்பு விழிப்பணா்வு குறித்தும் விழிப்புணா்வு சுவரொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் பள்ளியின் துணை ஆய்வாளா் ஸ்ரீபதி, ஊராட்சி மன்றத் தலைவா் எல்லப்பன், கிராம இளைஞா் இயக்க நிா்வாகிகள் விநாயகம், சந்தோஷ், சுரேஷ், தொண்டு நிறுவன நிா்வாகிகள் சுந்தா், வீரமணி, மொய்தீன், வட்டாரத் தலைவா் பொற்பாதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.