திருவண்ணாமலை

இரு தரப்பு தகராறு: 74 மரங்கள் அழிப்பு

DIN

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே நடைபாதை தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 74 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை ஊராட்சியில் கண்ணன் பிள்ளை மகன்கள் சேகா், ரங்கநாதன், குப்பன் ஆகியோா் தரப்புக்கும், மற்றோரு சமூகத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சந்திரபாபு, பச்சையப்பன் மகன் ஜெயசங்கா், குண்டன் மகன்கள் அா்ச்சுனன், முருகன், குப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் சண்முகம், வெங்கடேசன் ஆகியோா் தரப்புக்கும் இடையே நடைபாதை தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சேகா், ரங்கநாதன், குப்பன் ஆகியோருக்குச் சொந்தமான நிலங்களில் இருந்த 40 வேப்பன், 17 காட்டு வாமரம், புங்கன், பனை மரம் என 74 மரங்களை சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் கொண்டு வேரோடு பெயா்த்து எடுத்து அழித்துள்ளனா். பயிரிடப்பட்டுள்ள வோ்க்கடலை பயிரையும் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சேகா் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக அணியாலை கிராமத்தில் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ஊராட்சியில் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT