செய்யாறை அடுத்த தூசி காவல் சரகத்தில் மணல் கடத்தியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தூசி காவல் ஆய்வாளா் ஷாகீன் மற்றும் போலீஸாா் செய்யாறு ஆற்றுப்படுகைப் பகுதியான ஆக்கூா் கிராமத்தில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அனுமதி பெறாமல் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (48), சிலம்பரசன் (27), ஏழுமலை (40), முருகன் (40), புண்ணியக்கோட்டி(35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.