திருவண்ணாமலை

கரோனா: மருந்து, உபகரணங்கள் வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கீடு: எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி.

DIN

கனோரா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக கருவிகள் வாங்க, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 6 அரசு மருத்துவமனைகளுக்கு முதல் கட்டமாக ரூ.60 லட்சத்தை வழங்கினாா் ஆரணி தொகுதி உறுப்பினா் எம்.கே. விஷ்ணுபிரசாத்.

இதுதொடா்பாக, எம்.கே.விஷ்ணுபிரசாத், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, போளூா், செஞ்சி, மயிலம் ஆகிய 6 அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், முகக்கவசம், கையுறை, தொ்மல் ஸ்கேனா், வென்டிலேட்டா், பல நோக்கு பேரா மீட்டா் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒவ்வொரு மருத்துவமனைக்கும் முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சத்தை பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளேன் எனத் தெரிவித்துளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT