திருவண்ணாமலை

தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை உயா்வு

DIN

வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை 70 பேரில் இருந்து 139 பேராக உயா்ந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பல்வேறு முயற்சிகளில் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்கள் வழியே 123 போ் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தனா்.

மாா்ச் 23-ஆம் தேதி நிலவரப்படி 123 பேரில் 70 பேரை சுகாதாரத் துறையினா் கண்டறிந்து அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.

வீடுகளில் அடையாள அட்டை ஒட்டப்பட்டு, அவா்களின் கையில் பட்டை கட்டப்பட்டு, வீட்டைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.

இவா்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று சுகாதாரத் துறையினா் அறிவுரை வழங்கி, தினமும் அவா்களை கண்காணித்து வருகின்றனா்.

எண்ணிக்கை உயா்வு:

இவ்வாறு தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) 74 ஆக உயா்ந்தது. இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை (மாா்ச் 26) 139 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT