திருவண்ணாமலை

வந்தவாசியில் ஒரு மணியுடன் கடைகள் மூடல்

DIN

வந்தவாசி நகரில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் பிற்பகல் ஒரு மணியுடன் மூடப்பட்டன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது 3-ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதியிலிருந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சில கடைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனால் வந்தவாசி நகரில் கடந்த சில நாள்களாக கடைகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வந்தவாசி பகுதியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் துறையினா் மற்றும் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்களின் நலன் கருதி வெள்ளிக்கிழமை முதல் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நகரில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் பிற்பகல் ஒரு மணியுடன் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT