முகப்பு
திருவண்ணாமலை

பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளியது தொடா்பாக பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

வந்தவாசி அருகே ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளியது தொடா்பாக பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதி பெறாமல் மண் அள்ளப்படுவதாக வந்த தகவலின் பேரில், டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீஸாா் அங்கு சென்றனா்.

அப்போது, போலீஸாா் வருவதைப் பாா்த்த, ஏரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதையடுத்து மண் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →