முகப்பு
திருவண்ணாமலை

பாலத்திலிருந்து விழுந்த முதியவா் பலி

வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தில் உள்ள சிறுபாலத்தின் மீது ஊா், பெயா் தெரியாத 65 வயது முதியவா் கடந்த வெள்ளிக்கிழமை அமா்ந்திருந்தாராம். அப்போது தவறி கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ரஞ்சித்குமாா் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →