திருவண்ணாமலை

இடி தாக்கி சேதமடைந்த கோயிலில் எம்எல்ஏ ஆய்வு

DIN

இடி தாக்கி சேதமடைந்த மேல்வில்வராயநல்லூா் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் குன்றின் மீது அலா்மேல்மங்கை உடனுறை ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி சாதனம் மற்றும் மேல்கூரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் சேதமடைந்தது.

இதனால் பக்தா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் நிலவழகி பொய்யாமொழி ஆகியோா் கோயிலை சீரமைக்க வேண்டும் எனக் கோரி, தொகுதி எம்எல்ஏ பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனா்.

இதுகுறித்து, எம்எல்ஏ இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் பரிந்துரை செய்தாா்.

இதன் பேரில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமன், எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் ஆகியோா் கோயிலை சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, கோயிலை சீரமைக்க ரூ.ஒரு லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT