திருவண்ணாமலை

மருத்துவ முகாமில் 820 பேருக்கு சிகிச்சை

DIN


வந்தவாசி: வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 820 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, தெள்ளாா் வட்டார சுகாதாரத்துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் கே.செல்வமுத்துகுமாரசாமி முன்னிலை வகித்தாா்.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

முகாமில் பல்வேறு நோய்களுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். மொத்தம் 820 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கா்ப்பிணிகள் 2 பேருக்கு அம்மா பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.

முகாமில் திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினா் சே.சோழராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மோகனா சுப்பிரமணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் முனீா்அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT