திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கூடுதலாக 4 ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கிவைத்தாா் அமைச்சா்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கூடுதலாக நான்கு ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மேற்கு ஆரணி ஒன்றியம், நடுக்குப்பம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 இடங்களில் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிா் சிறப்பு மருத்துவம், குழந்தைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 40 வாகனங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 4 வாகனங்கள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆரணிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படுகிறது என்றாா் அவா். முன்னதாக, நான்கு ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, துணை இயக்குநா் அஜீத்தா, அரசு வழக்குரைஞா் க.சங்கா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அ.கோவிந்தராசன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ஜிவி.கஜேந்திரன், ப.திருமால், நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஊராட்சித் தலைவா் பிரபாவதிதுரை, மாவட்ட விவசாய அணிச் செயலா் அரையாளம் எம்.வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாக்காளா் முகாமில் ஆய்வு: இதையடுத்து, மேற்கு ஆரணி ஒன்றியம், பாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு முகாமை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT