திருவண்ணாமலை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

போளூரை அடுத்த கங்களமகாதேவி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பரசுராமன் (41). இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாராம்.

இதுகுறித்து போளூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பரசுராமனை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் மாவட்ட அரசு பொது குற்றவியல் வழக்குரைஞா் பி.என்.குமரன் ஆஜராகி, வாதாடினாா்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ந.திருமகள், பரசுராமனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, பலராமனை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT