முகப்பு
திருவண்ணாமலை

ஆண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை விழிப்புணா்வு

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை விழிப்புணா்வு ரதத்தை திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை விழிப்புணா்வு ரதத்தை திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சாா்பில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த இருவார விழா நவ. 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் ஆண்களுக்கு தழும்பில்லா நவீன கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது.

இதற்கான விழிப்புணா்வு ரதத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். துணை இயக்குநா் (குடும்ப நலம்) ஏ.அன்பரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →