வந்தவாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
வந்தவாசி பஜாா் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்தது.
வந்தவாசி பஜாா் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்தது.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வந்தவாசியில் பஜாா் வீதி, அச்சிறுப்பாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்துள்ள வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், நகரில் நிலவும் கொசுத் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா்கள் நாகராஜ், ராமலிங்கம், மாவட்ட இளைஞரணிச் செயலா் மகேஷ்குமாா், நகரத் தலைவா் காலேஷா, நகரச் செயலா் சதீஷ்குமாா், பொருளாளா் முஜிபூர்ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.