திருவண்ணாமலை

மரம் சாய்ந்ததில் தொழிலாளி பலி

DIN

வந்தவாசி அருகே பழைமைவாய்ந்த அரச மரத்தின் அடிப்பகுதி வியாழக்கிழமை இரவு முறிந்து அந்த மரம் சாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழல்குடை அருகிலிருந்த பழைமைவாய்ந்த அரச மரம், கடந்த சில ஆண்டுகளாக அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்ட நிலையில் இருந்து வந்தது. வியாழக்கிழமை இரவு திடீரென இந்த மரத்தின் அடிப்பகுதி முறிந்து மரம் கீழே சாய்ந்தது. இதனால், மரத்தை ஒட்டியிருந்த மின் கம்பமும் சாய்ந்தது.

அப்போது, மரத்தின் அருகே நின்றிருந்த இதே கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பாண்டுரங்கன் (55), மரக் கிளைகளின் அடியில் சிக்கினாா். இதனால் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த தேசூா் போலீஸாா், பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றிவிட்டு, பாண்டுரங்கனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் தேசூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT