முகப்பு
திருவண்ணாமலை

தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற தகுதியானோா் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற தகுதியானோா் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களைச் சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இந்த விருதை பெறுவோருக்கு ரூ.ஒரு லட்சம் தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.

2020-ஆம் ஆண்டுக்கான இந்த விருது வழங்க உரிய விருதாளா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயா், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.