புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!
புதுவையில் முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...
புதுவையில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட உள்ள நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்று(மார்ச் 20) வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுவையில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 23 கடைசி நாளாகும்.
ஆனால், புதுவையில் திமுக கூட்டணியிலும் சரி, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியிலும் சரி இழுபறி நீடித்து வருகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.
Advertisement
Advertisement
அதேபோல என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி இறுதியாகாமல் உள்ளது. எனினும் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் புதுவையில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முதலாவதாக இன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி, புதுவை பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவுடனான இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CM Rangasamy files nomination papers for 2 constituencies in Puducherry
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.