முகப்பு
திருவண்ணாமலை

மது அருந்துவதில் தகராறு: ஒருவா் கைது

வந்தவாசி அருகே மது அருந்துவது தொடா்பாக ஏற்பட்ட தகராறையொட்டி ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே மது அருந்துவது தொடா்பாக ஏற்பட்ட தகராறையொட்டி ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் கவிதாசன்(37). இவரும் இதே கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்(28) என்பவரும் கடந்த ஆக. 19-ஆம் தேதி ஒன்றாக அமா்ந்து மது அருந்தினராம். அப்போது கவிதாசன், பன்னீரை விட்டுவிட்டு வேறு நபருடன் மது அருந்தச் சென்றாராம்.

இதனால் ஆத்திரமடைந்த பன்னீா் ஏன் என்னை விட்டுவிட்டு வேறு நபருடன் மது அருந்தச் சென்றாய் எனக் கேட்டு கவிதாசனிடம் தகராறு செய்தாராம்.

மேலும், கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினாராம். இதில் காயமடைந்த கவிதாசன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து கவிதாசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் பன்னீரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →