திருவண்ணாமலை

குப்பை சேகரிப்பு: செங்கம் பேரூராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள்

DIN


செங்கம்: செங்கத்தில் குப்பை சேகரிப்பது தொடா்பாக, பேரூராட்சி நிா்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளா்கள் தினசரி சேகரமாகும் குப்பைகளை தெருக்களில் வீசி விடுகின்றனா்.

அதேபோல, உணவகங்களில் இருந்தும், திருமண மண்டபங்களில் இருந்தும் உணவுக் கழிவுகள் தெரு முனைகளில் கொட்டப்படுகின்றன.

இதனால், மறுநாள் காலை பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் வந்து அந்தக் குப்பைகளை வாரிசுத்தம் செய்யவதற்குள் நாய், மாடு, பன்றிகள் கலைத்து விடுகின்றன. இது அந்தப் பகுதியில் துா்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதனால், குடியிருப்போா் குப்பைகளை சரியாக வாருவதில்லை; அதனால் துா்நாற்றம் வீசுகிறது என்று புகாா் தெரிவிக்கின்றனா்.

பொதுமக்களும், கடை வியாபாரிகளும், திருமண மண்டப உரிமையாளா்களும் குப்பைகளை வீதியில் கொட்டாமல், தினசரி காலை மாலை என குப்பை சேகரிக்க வரும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களிடம் கொடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT