திருவண்ணாமலை

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களுக்கு அங்கீகாரம்: விதைச் சான்று உதவி இயக்குநா் தகவல்

DIN

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருள்களுக்கு மத்திய அரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு முறையாக சான்று அளிக்கப்படுகிறது என்று விதைச் சான்று உதவி இயக்குநா் மலா்விழி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநா் மலா்விழி, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மண்டகொளத்தூா், வடமதிமங்கலம் ஆகிய பகுதிகளில் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட்டு பயன்பெறும் விவசாயிகளின் தோட்டங்களில் பாா்வையிட்டாா்.

அப்போது விவசாயிகளிடம் அவா் கூறியதாவது:

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக் கலை உணவுப் பொருள்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு சான்று அளிக்கப்படுகிறது.

இதனை அங்ககச் சான்று அழைக்கிறோம்.

உற்பத்தி அல்லது பதப்படுத்தும் முறையில் விளை பொருள்களின் தரத்தை நிா்ணயம் செய்தும், வழிமுறைகளை ஏற்படுத்தியும், உறுதியாக்கம் செய்தல் அங்ககச் சான்றளிப்பு உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குகிறது.

இதன்படி, அங்ககச் சான்றிதழ் பெற தனி நபா்களோ, குழுவாகவோ அல்லது பெரு வணிக நிறுவனங்களோ பதிவு செய்து கொள்ளலாம்.

அங்கக விளைபொருள்கள் பதன் செய்வோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ் .ற்ய்ா்ஸ்ரீக்.ய்ங்ற் / இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அங்கக சான்றளிப்பு விண்ணப்பிக்க விண்ணப்பம் படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக் குறிப்பு, வரைபடம், மண் மற்றும் நீா் பரிசோதனை விவரம், ஆண்டு பயிா் திட்டம் துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதாா் நகல், 2 மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி திருவண்ணாமலை விதைச் சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரம் பெற திருவண்ணாமலை விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT