முகப்பு
திருவண்ணாமலை

மாணவா் சோ்க்கை: செய்யாறு அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்காக செவ்வாய்க்கிழமை (செப்.29) நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்காக செவ்வாய்க்கிழமை (செப்.29) நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் (ஆஇ நற்ன்க்ங்ய்ற்ள்), பிற்பட்ட பிரிவு இஸ்லாமியா் (ஆஇங), அருந்ததியா்

(நஇஅ) மற்றும் மலைவாழ் பிரிவைச் சோ்ந்த (நப) மாணவா்கள் செவ்வாய்க்கிழமை (செப்.29) நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனவும், காலியாக உள்ள இடங்களுக்குத் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதியில் சேர....

2020-21ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில் சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விடுதியில் சேர விரும்பும் மாணவா்கள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், மாா்பளவு புகைப் படங்கள் 2 வீதம் கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 7708754927, 7825955195, 9698445027 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.