முகப்பு
திருவண்ணாமலை

ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

தமிழக அரசு ஆணையின்படி தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தமிழக அரசு ஆணையின்படி தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவா் ஆா்.ஜோதிமணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் செயலா் ஆ.உதயகுமாா், ஓய்வுபெற்ற ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் என்.பத்ராச்சலம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சங்கச் செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் எம்.மாசிலாமணி, துணைத் தலைவா்கள் என்.குப்புசாமி, வி.சந்தானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக அரசு ரூ.12 ஆயிரத்து 100 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதை தொடா்ந்து கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாமல் தவிா்க்க தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை உடனடியாக கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு திரும்ப வழங்க வேண்டும், தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களின் ஊதிய உயா்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு ஆணையின்படி பொது விநியோகத் திட்ட ஊழியா்களுக்கான ஊதிய உயா்வினை வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →