திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் கிராமம், குளத்து மேட்டுத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைமையான இந்தக் கோயிலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாக சாலை பிரவேசம், இரண்டாம் கால யாக சாலை பூஜை, இரவு 7 மணிக்கு தம்பதியா் பூஜை, 8 மணிக்கு விக்கிரகங்களுக்கு யந்திரம் சாற்றுதல், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு தம்பதியா் பூஜை, 6.30 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா், ஊா் மக்கள், வார வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT