திருவண்ணாமலை

தெருக்கூத்து நாடகம் நடத்தி கரோனா விழிப்புணா்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த குத்தனூா் கிராமத்தில், தெருக்கூத்து நாடகம் மூலம் கிராம மக்களிடையே கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் என்.ஈஸ்வரி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் என்.முனுசாமி முன்னிலை வகித்தாா்.

காற்றாடி தொண்டு நிறுவனத்தினா் ஏற்பாடு செய்திருந்த, கரோனாவை ஒழிக்க முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்தி தற்காத்துக் கொள்ளுதல் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி கட்டைக்கூத்து நடிகா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றியச் செயலா் மகாலட்சுமி, சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், சுகாதார செவிலியா்கள் கலைவாணி, குஷ்பூ மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT