முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தா்களுக்குத் தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆடி மாத அமாவாசை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்திகளுக்கு வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த பூஜையில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) வரை பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

மற்ற ஊா்களில்...: இதேபோல, கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயில், வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் மற்றும் வந்தவாசி, போளூா், செய்யாறு, ஆரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.