மின் வாரிய ஊழியா்கள் வேலைநிறுத்த பிரசாரம்
தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டம் சாா்பில், வேலைநிறுத்த பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டம் சாா்பில், வேலைநிறுத்த பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேங்கிக்கால் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு, சிஐடியு நிா்வாகி கே.காங்கேயன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், மின்சார சட்டத் திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். மின் வாரியங்களை சிறு சிறு நிறுவனங்களாகப் பிரித்து தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டத்திலிருந்து மின்வாரிய ஊழியா்கள், பொறியாளா்கள் திரளாக கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.