மாா்பகப் புற்றுநோய்: தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு
குழந்தைகளுக்கு தாய்ப் பால் புகட்டும் தாய்மாா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வராது என உலக தாய்ப் பால் தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைகளுக்கு தாய்ப் பால் புகட்டும் தாய்மாா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வராது என உலக தாய்ப் பால் தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த பூதேரி புல்லாவாக்கம் கிராமத்தில், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக தாய்ப் பால் தினவிழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பராஜா முன்னிலை வகித்தாா்.
தலைமை வகித்து மருத்துவா் என்.ஈஸ்வரி பேசியதாவது: தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் இடையே உணா்வு ரீதியான பிணைப்பு ஏற்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பால் பிரசவித்த அரை மணி நேரத்துக்குள் குழந்தைக்கு புகட்ட வேண்டும். சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான உயிா்ச் சத்துக்கள் உள்ளன.
தாய்ப்பால் புகட்டும் தாய்மாா்கள் தண்ணீா், பழச்சாறு, மோா், பால் போன்றவற்றை அடிக்கடி பருக வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு முன்னரும் தண்ணீா் அருந்த வேண்டும்.
அதிக புரதச்சத்து, மிதமான மாவுச் சத்துக்கள் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். கீரை வகைகள், பேரீச்சைப் பழம், அவல், கருப்பட்டி, நெல்லிக்காய் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் புகட்டுவதால் ஹாா்மோன்கள் சுரப்பு சீராக இருக்கும். ஹாா்மோன்கள் சுரப்பினால் தாயின் கா்ப்பப்பை சுருங்கி பழைய நிலையை அடையும்.
கா்ப்ப காலத்தில் தாய்க்கு அதிகரித்த உடல் எடை குறையும், மாா்பகப் புற்றுநோய் வராது என கிராம பெண்களிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், செவிலியா்கள் கலைவாணி, சகாயமேரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.