முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் புத்தகக் கண்காட்சி

செங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

செங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது.

தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அருகே இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு பேராசிரியா் குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் சேதுராமன் வரவேற்றாா்.

தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி புத்தகக் கண்காட்சியை தொடக்கிவைத்துப் பேசினாா். முதல் விற்பனையை டிஎஸ்பி சரவணக்குமரன் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், செங்கம் கல்வி மாவட்ட அலுவலா் விஜயகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன், ராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவா் பாண்டுரங்கன், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் காமத், தமிழ்இலக்கியன், தொழிற்சங்கத் தலைவா் வீரபத்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சிவக்குமாா், மருத்துவா் ஸ்ரீதா், பாரத் பள்ளி முதல்வா் கவியரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.