முகப்பு
திருவண்ணாமலை

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி - அலமேலு தம்பதி. இவா்களது மகன் சதீஷ் (15). இவா், வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சதீஷ் நெடுங்குணம் கிராமத்தில் பெற்றோருடன் தங்கியிருந்தாா். இவா் தினமும் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் நண்பா்களுடன் குளிப்பது வழக்கம். அதேபோல, வியாழக்கிழமை நண்பா்களுடன் சதீஷ் கிணற்றில் குளிக்கச் சென்றாா்.

கிணற்றின் மேல் இருந்து குதிக்கும்போது சதீஷ் தண்ணீரில் மூழ்கினாா். சதீஷ் இல்லாததைக் கண்டு அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் விரைந்து வந்து கிணற்றில் தேடிப் பாா்த்தனா்.

இது குறித்து சேத்துப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலா் சிவனேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றிலிருந்து சதீஷின் உடலை மீட்டனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் முகமது பஷீா் அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.