கீழ்பென்னாத்தூா் ஒன்றியக் குழுக் கூட்டம்
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வாசுகி ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் க.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.சம்பத் வரவேற்றாா்.
கூட்டத்தில், பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் தீா்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. இதில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்கா், அனுராதா, பாக்கியலட்சுமி ஆகியோரின் சந்தேகங்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் சந்திரன், கால்நடை மருத்துவ அலுவலா் ஆனந்தன், வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சரவணன் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.