விடோபா சுவாமிகள் மடத்தில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அமைந்துள்ள விடோபா சுவாமிகள் மடத்தில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அமைந்துள்ள விடோபா சுவாமிகள் மடத்தில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
போளூரில் ஜமுனாமரத்தூா் சாலை அருகே 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விடோபா சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த மடம் அமைந்துள்ளது.
இந்த மடம் சிதிலமடைந்தும், சேதமடைந்தும் காணப்பட்டது. இதையடுத்து, விடோபா சீடா்கள், பக்தா்கள் சாா்பில் மடம் சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மடத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புதன்கிழமை மாலை கணபதி, லட்சுமி, நவகிரக, சுதா்ஷன ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து அன்று இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 2-ஆம் கால பூஜையாக வியாழக்கிழமை காலை திருப்பள்ளி எழுச்சி, யாக சாலை சித்தி, கோ பூஜை, நாடி சந்தானம் என பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக, புதன்கிழமை இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.