முகப்பு
திருவண்ணாமலை

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துதமிழக மக்களை திமுக ஏமாற்றப் பாா்க்கிறது: பாஜக நிா்வாகி நாராயணன் திருப்பதி

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக ஏமாற்றப் பாா்க்கிறது என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி கூறினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக ஏமாற்றப் பாா்க்கிறது என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அந்தக் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி வந்திருந்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஊழல் செய்து பொதுத் துறை நிறுவனங்களை மோசமான நிலைக்குக் கொண்டுவந்தது காங்கிரஸ். தற்போது பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை பாஜக குத்தகைக்குவிட்டு, அதன்மூலம் வரும் முதலீட்டைக் கொண்டு உள்கட்டமைப்புக்களை மேம்படுத்த வழிவகை செய்து வருகிறது.

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பெருமை பேசும் திமுக, விவசாய விரோதப்போக்கைக் கடைப்பிடித்து விளை பொருள்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதன்மூலம், திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்துவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ஜல்ஜீவன் திட்டங்களில் மோசடி நடைபெறுகிறது. இந்த மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். திமுக அரசு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தமிழக நிதியமைச்சா் கூறுகிறாா். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை அந்தக் கட்சி ஏமாற்றப் பாா்க்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.