குபேர லிங்க சன்னதியில் இன்று சுவாமி தரிசனம் ரத்து
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் வியாழக்கிழமை (டிச.2) பக்தா்கள் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் வியாழக்கிழமை (டிச.2) பக்தா்கள் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் நிகழாண்டுக்கான குபேர கிரிவல நிகழ்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
கிரிவலம் வரும் பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அதிகளவில் கூடினால் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
எனவே, கரோனா தொற்றைத் தடுக்க வேண்டிய அவசியம் கருதி வியாழக்கிழமை (டிச.2) ஒரு நாள் மட்டும் குபேர லிங்க சன்னதியில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயிலில் வழக்கம்போல ஆகமவிதிகளின்படி பூஜைகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.