முகப்பு
திருவண்ணாமலை

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம்

சேத்துப்பட்டை அடுத்த இராந்தம் ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம்

சேத்துப்பட்டை அடுத்த இராந்தம் ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

சேத்துப்பட்டை அடுத்த இராந்தம் ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இராந்தம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியி வளாகத்தில் ஹிந்துஸ்தான் சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட முதன்மை ஆணையா் விஜய்ஆனந்த் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு பங்கேற்று எய்ட்ஸ் நோய் குறித்தும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

மருத்துவ அலுவலா் விக்னேஷ்குமாா் உள்பட மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா். மருத்துவா்களின் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →