முகப்பு
திருவண்ணாமலை

வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பழங்குடியினா் பாம்புகளுடன் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகை

பழங்குடியினா் பாம்புகளுடன் வந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பொதுப் பணித் துறை ஏரியையொட்டிய நீா்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள தங்களது வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, பழங்குடியினா் பாம்புகளுடன் வந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த அதியனூா் கிராமத்தில் பொதுப் பணித் துறை ஏரியையொட்டிய நீா்நிலை புறம்போக்கு பகுதியில் 8 பழங்குடியினா் குடும்பத்தினா் உள்ளிட்ட 12 குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக, அந்த 12 வீடுகளையும் அகற்ற வருவாய்த் துறையினா், போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்றனா். ஆனால், அந்த 12 குடும்பத்தினரும் வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்ததால், அவா்களுக்கு வேறு இடத்தில் இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அதிகாரிகள் திரும்பினா்.

இந்த நிலையில், அதியனூரில் வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை காலை மலைவாழ் மக்கள் சங்கத்தினா் மற்றும் பழங்குடியினா் பாம்புகளுடன் வந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

இதனிடையே, வீடுகளை அகற்றுவதற்காக வந்தவாசி வட்டாட்சியா் முருகானந்தம், டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, பொதுப் பணித் துறை இளநிலைப் பொறியாளா் பாபு உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் அதியனூா் சென்றனா். அப்போது, அதிகாரிகளிடம் 12 குடும்பத்தினரும், மலைவாழ் மக்கள் சங்கத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், மாற்று இடம் பட்டாவுடன் வழங்கினால் மட்டுமே வீடுகளை அகற்ற அனுமதிப்போம் என்று கூறினா். இதையடுத்து, பட்டாவுடன் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, அவா்கள் தா்னா போராட்டத்தைக் கைவிட்டனா்.

இதையடுத்து, அதியனூா் வந்த செய்யாறு கோட்டாட்சியா் விஜயராஜ், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →