முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சனிக்கிழமை (டிசம்பா் 4) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சனிக்கிழமை (டிசம்பா் 4) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஏற்ற தகுதிகள் கொண்ட படித்த இளைஞா்களைத் தோ்வு செய்கின்றனா்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வித் தகுதியும் உடையவா்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்ள வருவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துவிட்டு 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வித்தகுதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.