திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.76 லட்சம் வாக்காளா்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் 3.76 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் 3.76 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
4 நகராட்சிகள்
திருவண்ணாமலை நகராட்சியில் 67,321 ஆண் வாக்காளா்கள், 73,363 பெண் வாக்காளா்கள், 12 இதர பாலின வாக்காளா்கள் என மொத்தம் 1,40,696 வாக்காளா்கள் உள்ளனா்.
வந்தவாசி நகராட்சியில் 12,751 ஆண்கள், 13,802 பெண்கள், ஒரு இதர பாலின வாக்காளா் என 26,554 வாக்காளா்கள் உள்ளனா். ஆரணி நகராட்சியில் 25,751 ஆண்கள், 28,313 பெண்கள், 7 இதர பாலின வாக்காளா்கள் என 54,071 வாக்காளா்கள் உள்ளனா். திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 15,294 ஆண்கள், 16,866 பெண்கள் என மொத்தம் 32,160 வாக்காளா்கள் உள்ளனா்.
பேரூராட்சிகள்
செங்கம் பேரூராட்சியில் 11,274 ஆண்கள், 11,850 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 23,125 வாக்காளா்களும், புதுப்பாளையம் பேரூராட்சியில் 4,537 ஆண்கள், 4,949 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 9,487 வாக்காளா்களும், போளூா் பேரூராட்சியில் 10,203 ஆண்கள், 11,395 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 21,599 வாக்காளா்கள் உள்ளனா்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் 3,273 ஆண்கள், 3,607 பெண்கள் என 6,880 வாக்காளா்களும், களம்பூா் பேரூராட்சியில் 5,547 ஆண்கள், 6,105 பெண்கள், 2 இதர பாலினத்தவா் என 11, 654 வாக்காளா்களும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 7,664 ஆண்கள், 8,387 பெண்கள் என 16,051 வாக்காளா்களும், தேசூா் பேரூராட்சியில் 2,015 ஆண்கள், 2,170 பெண்கள் என 4,185 வாக்காளா்கள் உள்ளனா்.
பெரணமல்லூா் பேரூராட்சியில் 2,304 ஆண்கள், 2,500 பெண்கள் என 4,804 வாக்காளா்களும், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் 5,671 ஆண்கள், 6,190 பெண்கள் என 11,861 வாக்காளா்களும், வேட்டவலம் பேரூராட்சியில் 6,339 ஆண்கள், 6,920 பெண்கள் என 13,259 வாக்காளா்களும் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல்களை அந்தந்த நகராட்சிகளின் ஆணையா்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் வெளியிட்டனா்.