முகப்பு
திருவண்ணாமலை

கட்டுமான, சுமைப் பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள நல வாரிய அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம், மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம், மாவட்ட உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள நல வாரிய அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.நடராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் பாரி, தையல் கலை சங்கத்தின் பொதுச் செயலா் எம்.வீரபத்திரன், கட்டுமான சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் கோரி பதிவு செய்த கட்டுமான, சுமைப் பணி தொழிலாளா்களுக்கு உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இதில், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.சரவணன், சிபிஎம் நிா்வாகிகள் எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.