முகப்பு
திருவண்ணாமலை

குழாய் உடைப்பைச் சீரமைக்கக் கோரி சாலை மறியல்

வந்தவாசியில் கழிவுநீா் கால்வாய் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட குழாய் உடைப்பைச் சீரமைக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

வந்தவாசியில் கழிவுநீா் கால்வாய் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட குழாய் உடைப்பைச் சீரமைக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி நகராட்சி 1-ஆவது வாா்டில் வந்தவாசி பயணியா் விடுதியையொட்டியுள்ள வாணியங்குளம் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களின் குடிநீா் தேவைக்காக வந்தவாசி நகராட்சி சாா்பில் பயணியா் விடுதி சுற்றுச் சுவரையொட்டி, ஆழ்துளைக் கிணறுடன் கூடிய தண்ணீா் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைப்பதற்காக கடந்த 15 நாள்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்ட போது, ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீா் தொட்டிக்குச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாம். இதனால், கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் தடைப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் பகுதி பொதுமக்கள் வந்தவாசி-ஆரணி சாலையில் பயணியா் விடுதி அருகே காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: குடிநீா் குழாய் உடைப்பால் கடந்த 15 நாள்களாகத் தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால், ஒரு கி.மீ. தொலைவு சென்று தண்ணீா் எடுத்து வருகிறோம். குழாய் உடைப்பைச் சரி செய்யக் கோரி முறையிட்டும் சீரமைக்கவில்லை. உடனடியாக குழாய் உடைப்பைச் சீரமைத்து, குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

தகவலறிந்த நகராட்சி பொறியாளா் உஷாராணி, டி.எஸ்.பி. விஸ்வேஸ்வரய்யா ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, குழாய் உடைப்பை விரைந்து சீரமைப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →