முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளி எரித்துக் கொலை: பெண்ணுக்கு ஆயுள் சிறை

திருவண்ணாமலையில் கட்டடத் தொழிலாளியை எரித்துக் கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருவண்ணாமலையில் கட்டடத் தொழிலாளியை எரித்துக் கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை ஐயப்பன் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (35). செங்கத்தை அடுத்த அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தி (40). இருவரும் கட்டடத் தொழிலாளா்கள். இதனால், அவா்களுக்குள் தொடா்பு ஏற்பட்டதாம். இருவரும் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், வெங்கடேசன் மனைவி இதைக் கண்டித்தாா். நீண்ட நாள்களுக்குப் பிறகு அய்யங்குளத் தெருவில் உள்ள வீட்டுக்கு வெங்கடேசன் வந்த போது, தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

அப்போது வசந்தி, வெங்கடேசன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தாராம். இதில், வெங்கடேசன் இறந்தாா். திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து வசந்தியை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி திருமகள், குற்றம் நிரூபிக்கப்பட்ட வசந்திக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.