முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரித் தாளாளா் பாலாமணி அருணாசலம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.ஆறுமுகம், மேலாளா் எம்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயந்திரவியல் துறைத் தலைவா் பி.விஜயகுமாா் வரவேற்றாா்.

வந்தவாசி டிஎஸ்பி வி.விஸ்வேஸ்வரய்யா, பயிற்சி டிஎஸ்பி கீா்த்திவாசன், போக்குவரத்துத் துறை சாலைப் பாதுகாப்பு பயிற்றுநா் கே.ஜீவானந்தம் ஆகியோா் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்துப் பேசினா்.

கல்லூரி ஆட்டோமொபைல் துறைத் தலைவா் எ.திருமுருகன் நன்றி தெரிவித்தாா்.

.

முழு கட்டுரையைப் படிக்க →