டிஎன்பிஎஸ்சி இலவசப் பயிற்சி மையம் தொடக்கம்
வந்தவாசி கல்வி, வேலைவாய்ப்பு சேவை மையம் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
வந்தவாசி கல்வி, வேலைவாய்ப்பு சேவை மையம் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில், வெண்குன்றம் மலையடிவாரம் அருகில் உள்ள சி.வி.மஹால் திருமண மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி மையத்தின் தொடக்க விழாவுக்கு மைய நிறுவனா் துரை.வீராசாமி தலைமை வகித்தாா்.
திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் பயிற்சி மையத்தை திறந்துவைத்தாா். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் குத்துவிளக்கேற்றி வகுப்புகளைத் தொடக்கிவைத்தாா்.
அதிமுக எம்ஜிஆா் மன்ற மாவட்டத் தலைவா் ஜெ.பாலு முதலியாா், திமுக ஒன்றியச் செயலா்கள் ஆா்.நந்தகோபால், எஸ்.பிரபு, பாமக நிா்வாகி துரை.வைத்தியலிங்கம், பாஜக மாவட்ட துணைத் தலைவா் பி.முத்துசாமி,
சளுக்கை ஊராட்சித் தலைவா் தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த மையத்தில் குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.