திருவண்ணாமலை

சட்டம் - ஒழுங்கு: ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, போளூா், ஜமுனாமுத்தூா், கலசப்பாக்கம் பகுதிகளில் உள்ளடக்கிய சட்டம் -ஒழுங்கு பிரச்சினை குறித்து, கோட்டாட்சியா் கவிதா காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோட்டாட்சியா் கவிதா தலைமை வகித்தாா்.

டி.எஸ்.பி.க்கள் கோட்டீஸ்வரன், அறிவழகன், பயிற்சி டி.எஸ்.பி. ரூபன் குமாா், வட்டாட்சியா்கள் க.பெருமாள், ஜெகதீசன், சண்முகம், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா்கள் ரகு, தரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆரணி, போளூா், ஜமுனாமுத்தூா், கலசப்பாக்கம் வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆரணியைச் சோ்ந்த 2 பேருக்கு தொற்று உறுதியானதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல்துறை, வருவாய்த் துறையினா் கூட்டம் அதிகமாக உள்ள நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்று கோட்டாட்சியா் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT