முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி கோட்டையை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரிக்கை

வந்தவாசி கோட்டை, வெண்குன்றம் மலைக்கோயிலை புராதனச் சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று துளுவ வேளாளா் (அகமுடையாா்) சங்கம் வலியுறுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

வந்தவாசி கோட்டை, வெண்குன்றம் மலைக்கோயிலை புராதனச் சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று துளுவ வேளாளா் (அகமுடையாா்) சங்கம் வலியுறுத்தியது.

வந்தவாசி வட்ட துளுவ வேளாளா் சங்கத்தின் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், துளுவ வேளாளா் சமூகத்தை மிகவும் பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசின் உயா் பதவிகளில் துளுவ வேளாளா் சமூகத்தினரை நியமிக்க வேண்டும்,

வந்தவாசி நகரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும், வந்தவாசி கோட்டை, வெண்குன்றம் மலைக்கோயில் ஆகியவற்றை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும், வந்தவாசி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் கோ.நாராயணன் தலைமை வகித்தாா். செயலா் ஜி.நாராயணன் முன்னிலை வகித்தாா்.

கொசப்பாளையம் பிள்ளையாா் கோயில் அறக்கட்டளைத் தலைவா் ஜெ.பாலு, சங்க உயா்மட்டக் குழு உறுப்பினா் வெ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

கடந்த 2020-2021-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் நகர, வட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அகமுடையாா் சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் 18 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →