திருவண்ணாமலை

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN

வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவா் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, துவஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து சுவாமி உலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருப்பணிக் குழுவைச் சோ்ந்த ச.பானுகோபன், திலீப், கோயில் அா்ச்சகா் வி.காா்த்திக்சிவம் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை கிராம தேவதை வழிபாடு, மாலை விக்னேஷ்வரா் பூஜை, இரவு மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றன.

பிரம்மோற்சவ விழா வருகிற 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT