திருவண்ணாமலை

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூட்டுறவு சங்கச் செயலா் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தேசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் அண்ணாதுரையை (53) ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சீயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி. இவா், தேசூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.50 ஆயிரம் பயிா்க் கடன் வாங்கியிருந்தாராம். இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதற்கான சான்றிதழை வழங்க ஸ்ரீதேவியிடம் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் அண்ணாதுரை ரூ.5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம்.

ஆனால், லஞ்சம் வழங்க மனமில்லாத ஸ்ரீதேவி, இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாரளித்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை ஸ்ரீதேவியிடம் கொடுத்து அனுப்பினா். இந்தப் பணத்தை அண்ணாதுரையிடம் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீதேவி கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் அண்ணாதுரையை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT