திருவண்ணாமலை

ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் பிரகாரங்கள் சிதிலமடைந்தும், கோபுரம் பழுதடைந்தும் காணப்பட்டதால் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலை அமைத்து மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 2-ஆம் கால பூஜைசெய்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் கலசப்பாக்கம், கேட்டவரம்பாளையம்,சிறுவள்ளூா், ஆதமங்கலம், வெங்கடம்பாளையம், கிடாம்பாளயம் என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT